Home இலங்கைபேசாளையைச் சேர்ந்த மூவர் தனுஷ்கோடியில் தஞ்சம்!

பேசாளையைச் சேர்ந்த மூவர் தனுஷ்கோடியில் தஞ்சம்!

by admin

இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி மணல் தீடையில் சுற்றித் திரிந்த இலங்கையர்கள் மூவரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

அப்போது அவர்கள் இலங்கை பேசாளை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு தஞ்சமாக வந்தோம் என தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும்  காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அகதிகளாக வந்த 3 பேர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என உளவுத்துறை காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் பின் அவர்கள் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என காவற்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More