Home இலங்கையாழில். முன்னெடுக்கப்படும் வெள்ளை ஈ யை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு உதவ கோரிக்கை

யாழில். முன்னெடுக்கப்படும் வெள்ளை ஈ யை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு உதவ கோரிக்கை

by admin
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாகவும் ,தன்னார்வமாக உதவி செய்ய விரும்புவர்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
‘இருவார கால தீவிர தேசிய கள செயற்பாடு – 2025’ என்னும் தொனிப்பொருளில் வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டம் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் கச்சாயில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமானது.
குறித்த செயற்திட்டத்திற்காக  கொழும்பில் இருந்து 150 இயந்திரங்கள், 150 பணியாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனாலும் ஓர் இயந்திரத்தை இயக்குவதற்கு ஆகக் குறைந்தது 4 பேர் தேவை. எனவே ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தன்னார்வமாக உதவி செய்ய விரும்புவர்களை எதிர்பார்த்துள்ளனர்.
செயற்றிட்டத்துக்கு தன்னார்வமாக உதவி செய்ய விரும்புவர்கள் தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தனை 0766904580 எனும் தொலைபேசி இயக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.
 நாளைய தினம் புதன்கிழமை சாவகச்சேரி பிதேச செயலர் பிரிவு முன்னெடுக்கப்படவுள்ளது. அதனால் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்டவர்கள் 0776116551 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்புகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேவேளை 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிலும் (0774409933) 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில்   உடுவில் பிரதேச செயலர் பிரிவிலும் (0779074230) 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவிலும் (0778222560) 25ஆம் திகதி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிலும் (0771976959) செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More