ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஸ்யாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை இன்றைய தினம் ஆரம்பித்துள்ளார். இன்று அதிகாலை புறப்பட்ட ஜனாதிபதி எதிர்வரும் 24ம் திகதி வரையில் ரஸ்யாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் விசேட அழைப்பின் பேரில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ள அவர் நாளைய தினம் விளாடிமிர் புட்டினை சந்திக்க உள்ளார். இதன்போது இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளன.
ஜனாதிபதி நாளை ரஷ்யா பயணம்
Mar 21, 2017 @ 10:26
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் விசேட உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாளை (22) ரஷ்யாவிற்கு பயணமாகிறார். 1974 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ரஷ்யாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர் 40 வருடங்களிற்கு பின்னர் ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்வதற்காக இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு இந்த அழைப்பு கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது பொருளாதார, வர்த்தக, சுற்றுலா, விஞ்ஞானம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் கலாசார துறைகளுக்குரிய ஒப்பந்தங்கள் பல கைச்சாத்திடப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.