151
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பே வழங்கப்படுகின்றது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சந்திரிக்கா ஆகியோருக்கு வாகனங்களும் பாதுகாப்பும் வழங்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கம் மற்றும் ஐக்கியம் தொடர்பிலான நிறுவனத்தின் தலைவராக சந்திரிக்கா செயற்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனத்தின் தலைவர் என்ற அடிப்படையில் அரசாங்க செலவில் சில நேரங்களில் ஹெலிகொப்டர்களை சந்திரிக்கா பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love