Home இலங்கையாழில். இந்திய துணை தூதரக வாகனம் விபத்து!

யாழில். இந்திய துணை தூதரக வாகனம் விபத்து!

by admin

யாழ்ப்பாண அண்மித்த பகுதியில் இந்திய துணைத்தூதரகத்திற்கு சொந்தமான சொகுசு வாகனம் விபத்துக்குள்ளாகி கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

வாகனம் விபத்துக்குள்ளான வேளை வாகனத்தில் சாரதி மாத்திரமே பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ் . நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பயணித்த இந்திய துணை தூதரகத்திற்கு சொந்தமான வாகனத்துடன் , நல்லூர் – ஓட்டுமட வீதியால் வந்த கார் கந்தர்மட சந்தியில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் வாகன சாரதிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இரு வாகனங்களும் கடுமையான சேதமடைந்துள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More