பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதனால் மக்களுக்கு சேவையாற்ற முடியவில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன பாராளுமன்றில் நேற்றைய தினம் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பாராளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து தொடர்ச்சியாக தடுப்புக் காவலில் வைப்பதனால், அவர்களினால் மக்களுக்கு சேவையாற்ற முடிவதில்லை எனத் தெரிவித்துள்ள அவர் தாம் பாராளுமன்ற உறுப்பினரின் பெயரைக் குறிப்பிடவில்லை எனவும், எனினும் அந்த பாராளுமன்ற உறுப்பினர் பிணை வழங்ப்படாது தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கொலைக் குற்றவாளி ஒருவரைப் போன்று நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.