127
சவுதி அரேபியாவில் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கடந்த 19ம் திகதி 4 பேர் ஒரு விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக அலைகள் எழுந்தன. இதன்காரணமாக படகில் இருந்த மீனவர்கள் கடலில் விழுந்ததனையடுத்து மூவர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு வேறொரு படகில் வந்தவர்களால் ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டதுடன் கடலோர காவல்படைக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து தேடுதலில் ஈடுபட்ட கடலோர காவல்படை ஒருவரது உடலை மீட்டதுடன் உலங்குவானூர்தியின் உதவியுடன் ஏனையவர்கள் உடல்கள தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love