Home இலங்கையாழ் விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்தவர் உயிரிழப்பு

யாழ் விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்தவர் உயிரிழப்பு

by admin

 

யாழ்ப்பாணத்தில் வீதியை கடக்க முற்பட்ட முல்லைத்தீவை சேர்ந்த முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த இளையதம்பி நந்தகுமார் (வயது 70) என்பவரே உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவில் இருந்து , அச்சுவேலிப் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு    சென்ற முதியவர்    கடந்த 27ஆம் திகதி உறவினர் வீட்டுக்கு அருகில் உள்ள  வீதியை கடக்க முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்தவரை மீட்டு , சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  சம்பவம் தொடர்பில் அச்சுவேலி  காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More