300
தங்காலையில் உள்ள மடிலா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆறு வயதுச் சிறுமி பலத்த அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு உயிாிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். தங்காலையைச் சேர்ந்த குறித்த சிறுமி குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று உள்ளூர் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த நிலையில் இன்று (13) கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தங்காலை காவல்துறையினா் குறிப்பிட்டுள்ளனா்.
கொழும்பில் உள்ள ஒரு முன்னணி பெண்கள் பாடசாலையின் மாணவியே இவ்வாறு கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு உயிாிழந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தது.
Spread the love

