அண்மையில் ஐ நா பிரதிநிதி யாழ் வந்து செம்மணியின் அகழ்வு பணிகளை பார்வையிட்டார். அவரது இந்த செயல் நீதிக்கான சமிக்ஞை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் அத்தனையும் கலைந்துவிட்டது.ஐ.நாவின் பிரதிநிதி உள்ளக பொறிமுறையை எம்மிடம் திணித்துச் சென்றது போன்று அவரது கருத்து இருக்கின்றது.
நாம் சர்வதேச விசாரணையையே கோருகின்றோம். அதற்கான வலியுறுத்தலையே இன்றும் வலியுறுத்துகின்றோம்.
எனவே எமக்கு உள்ளக பொறிமுறை வேண்டாம். அதில் எமக்கு நம்மிக்கை இல்லை.
எனவே எதிர்வரும் 30 ஆம் திகதியன்று செம்மணியில் போராட்டம் ஒன்றை வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளோம்.
குறித்த போராட்டத்துக்கு மத தலைவர்கள், பல்கலை சமூகம், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைவரும் பேதங்களற்ற வகையில் ஒன்றுதிரண்டு போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்

