இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை திரையிட்டமைக்காக மலேசிய மனித உரிமை செயற்பாட்டாளரான லீனா ராசாத்தி ஹென்றிக்கு மலேசிய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கோலாலம்பூர் நீதவான் நீதிமன்றத்தினால் இவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
செனல்4 தொலைகாட்சியின் இலங்கையின் கொலைகளம் ஆவணப்படத்தை திரையிட்டமைக்காக அவர் கடந்த 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். மலேசிய திரைப்படத் தணிக்கை குழுவின் அனுமதி இன்றி, குறித்த ஆவணப்படத்தை காட்சிப்படுத்தியதாக தெரிவித்து, அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டு கோலாலம்பூர் நீதவான் நீதிமன்றத்தில் கடந்த பெப்ரவரி 21ம் திகதி இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. அபராதம் செலுத்தப்படாவிட்டால் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.