ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று சமர்ப்பிக்கப்பட்டு இன்றே நிறைவேற்றப்படும் என ஜெனீவா தகவல்கள் கூறுகின்றன.
குறித்த பிரேரணைக்கு ஏற்கனவே 12 உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளதோடு, இலங்கையும் இணை அனுசரணை வழங்குகிறது.
‘நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை இலங்கையில் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பின் கீழ் முன்வைக்கப்படவுள்ள குறித்த பிரேரணையானது, ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
அத்தோடு, 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பாக பிரேரணையை எதிர்வரும் 2019ஆம் ஆண்டுவரை அமுல்படுத்துவதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையை திருத்தம் இன்றி நிறைவேற்றிக்கொள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக ஜெனீவா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.