Home இலங்கைமாகாண சபை தேர்தலை நடத்த தயார் – யாழில் தேர்தல்கள் ஆணையாளர்

மாகாண சபை தேர்தலை நடத்த தயார் – யாழில் தேர்தல்கள் ஆணையாளர்

by admin
மாகாணசபை தேர்தல் காலம் தாழ்த்திச் சென்றுகொண்டிருப்பது விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாணசபை முறைமையை விகிதாசார முறைமையாக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே காரணம் என தேர்தல் ஆணையாளர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை பயணம் மேற்கொண்ட  தேர்தல்கள் அலுவலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
சட்ட வரைவால் எல்லை நிர்ணய வரையறைகள் சீர்திருத்தம் குறித்த பிரச்சினை இருக்கின்றது. இது தீர்க்கப்பட்டால் உடனடியாக தேர்தல் நடைபெறும். அதற்கு திணைக்களம் தயாராக இருக்கின்றது.
அல்லது குறித்த தீமானத்தை தற்போது நாடாளுமன்றில்  தனிநபர் பிரேரணையூடாக நிறைவேற்றி மீண்டும் பழைய முறைமையை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றினால் பழையா முறைமையில் தேர்தலை நடத்த முடியும். அதற்கு ஏற்ற கால அவகாசமும் உள்ளது என தெரிவித்தார்.
மேலும்  ஜனநாயக தினத்தை முன்னிட்டு நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.   சர்வதேச ஜனநாயக தினம் செப்ரெம்பர் 15 ஆம் திகதியான இன்றைய தினம் உலகின் ஜனநாயகம் மிக்க நாடுகளில் அனுஸ்டிக்கப்படும் நிலையில் குறித்த நிகழ்வின் விழிப்புணர்வு நிகழ்வுகள் யாழ் மாவட்டத்தின் நெடுந்தீவு பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

200 இற்கும் அதிக நாடுகள் இருக்கும் சூழலில் 196 நாடுகளில் இந்த ஜனநாயக தினம் கொண்டாடப் படுகின்றது. ஜனநாயகம் என்பது தேர்தல்களை நடத்துதல் மட்டுமல்ல அந்த நிலையை மக்களிடையே கொண்டு சென்று இலக்கை அடைவதுமாகும்.
குறிப்பாக இளம் பிரைஜைகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் நவீனத்துவங்களை உள்வாங்குதல் என்பனவும் இதில் மாற்றத்தை உருவாக்கும் முக்கிய பொறிமுறைகளாக இருக்கின்றன. இதனடிப்படையில் நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை மற்றும் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படும் இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளின் முதன்மையானதாக தேர்தல் திணைக்களத்துடனான தகவல் தொழில் நுட்பத்தின் வகிபாகத்தை நெடுந்தீவு மக்களுக்கு கொண்டுசெல்வதாக உள்ளது என தெரிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More