Home இலங்கை சங்கானையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் 1130 பேர் பயன்பெற்றனர்!

 சங்கானையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் 1130 பேர் பயன்பெற்றனர்!

2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து வேலைவாய்ப்பு திணைக்களத்தில் பதிவு செய்துள்ளனர்!

by admin
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு  வேலைவாய்ப்பு திணைக்களம் இணைந்து நடாத்தும் விசேட தொழிற் சந்தை எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அது தொடர்பாக பங்குதாரர்களுடனான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட செயலர்,

 ஏற்கனவே மாவட்ட செயலக மனிதவள வேலைவாய்ப்பு திணைக்களத்தில் இரண்டாயிரம் பேர் வரையில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து பதிவு செய்துள்ளனர்.
அந்நிலையில் தொழிற்சந்தை நிகழ்வில் கலந்து கொள்ளும்  தொழில் வழங்குனர்களின் தேவைப்பாடுகளை கேட்டறிந்து,   தொழில் தேடும் இளைஞர் யுவதிகளின் தேவைப்பாடுகளையும் இணைக்கும்  தொழிற்சந்தை நிகழ்வு ஆரோக்கியமானதாக நடைபெற அனைவரும்  ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், குறித்த தொழிற் சந்தையில் கலந்து கொள்ளும் தொழில்தேடுவோரின்  தரவுகளை மாவட்ட செயலக இணையத்தளத்தில் பதிவுசெய்ய ஆலோசனை வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் மனித வள மாவட்ட இணைப்பாளர்   க.கருணாகரன்,  மாவட்ட மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், தொழிற்சந்தை நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள பங்குதாரர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

 சங்கானையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் 1130 பேர் பயன்பெற்றனர்!

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடாத்திய நடமாடும் சேவையில் ஆயிரத்து 130 பொதுமக்கள் , 14 சேவைகளைப் பெற்றுக் கொண்டார்கள் என மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

நடமாடும் சேவையில் கண் பரிசோதனையினை 523 பேரும், ஆட்பதிவுச் சேவையினை 441 பேரும், மருத்துவ பரிசோதனைச் சேவையினை 442 பேரும், பிறப்பு இறப்பு பதிவுச் சேவையினை 103 பேரும், மத்திய மோட்டார் வாகன போக்குவரத்து சேவையினை 26 பேரும், மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவையினை 101 பேரும், ஓய்வூதிய சேவையினை 26 பேரும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகளினை 2 பேரும் காணி தொடர்பான சேவைகளினை 19 பேரும் பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகளினை 10 பேரும் பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளினை 7 பேரும் முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகளினை 3 பேரும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளினை 9 பேரும் கிராம சேவையாளர்களால் வழங்கப்படும் சேவைகளினை 2 பேரும் உள்ளடங்களாக1130 பொதுமக்கள் தமக்குரிய சேவைகளைப் பெற்றுக்கொண்டார்கள்

அதேவேளை மாவட்ட செயலர், கண் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி மலரவனோடு தொடர்பு கொண்ட போது  இவ் நடமாடும் சேவையின் மூலமாக 107 பேர் கண்புரை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும் இவர்களுக்கான சத்திர சிகிச்சையினை மூன்று வார காலத்துக்குள் இலவசமாக மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார் எனவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More