390
நீதவானுக்கு உரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். யாழ்ப்பாணம் , மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் , நீதவானுக்குரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாதமை, உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நீதவான் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நீதி சேவை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.
அவரது பதவி விலகலை, நீதி சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதை , அடுத்து , நேற்றைய தினம் புதன்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி, மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு சென்ற நிலையில், நீதவானின் சமாதான அறை மற்றும் நீதிமன்றத்தில் நீதவானின் கட்டுப்பாட்டில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் என்பன மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், நீதவான், நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்தார்.
Spread the love

