எப்போதும் ராணுவத்தினர் போருக்கு தயாராக இருக்க வேண்டுமென இந்தியாவின் இராணுவத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எல்லை முழுவதும் உள்ள வீரர்கள் எப்போது போர் மூண்டாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற ராணுவ தொலைத்தொடர்பு பற்றிய 2 நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வழக்கமான முறையிலோ அல்லது புதுமையான வடிவிலோ இந்தியா தொடர்ந்தும் போர் அச்சுறுத்தலை எதிர்கொண்டு இருக்கின்றது எனவும் எனவே, எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் எல்லையில் பணியாற்றும் வீரர்கள் எப்போதும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ராணுவத் துறை தொடர்பான நவீன தொழில்நுட்பங் களைக் உடனுக்குடன் புகுத்துவதோடு ராணுவத்துக்கு தேவையான சரியான தொழில்நுட்பத்தை அடையாளம் கண்டு ஆயுத கொள்வனவுக்கான நடைமுறைகளை எளிமையாக்கும் நடவடிக்கைகரள மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமூக வலைதளங்களை எதிரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது எனவும் எனவே, ராணுவத்தினர் இடையிலான தொலைபேசி உரையாடல் மற்றும் தரவு பரிமாற்ற நடைமுறையை பாதுகாப்புடன் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.