Home இலங்கை“டிங்கர்” எனப்படும் ஸ்ரீதரன் நிரஞ்சன் டுபாயில் இருந்து இலங்கைக்கு!

“டிங்கர்” எனப்படும் ஸ்ரீதரன் நிரஞ்சன் டுபாயில் இருந்து இலங்கைக்கு!

by admin

அண்மயில் டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ‘டிங்கர்’ எனப்படும் ஸ்ரீதரன் நிரஞ்சன் இன்று காலை இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பு 15 இல் வசிக்கும் 36 வயதுடைய இந்த சந்தேக நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பழனி ஷிரான் க்ளோரியன் அல்லது “கொச்சிக்கடை ஷிரான்” இன் சீடராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிரேண்ட்பாஸ் காவற்துறைப் பிரிவில் உள்ள மஹவத்த பொது மயானத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய சம்பவத்தில், கொலைக்கு பயன்படுத்திய  காரின் சாரதியாக இவர் செயற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், 19.08.2025 அன்று பேலியகொட காவற்துறைப்  பிரிவில் உள்ள ஸ்ரீ ஞானரத்ன மாவத்தையில் ஒருவரை சுட்டுக் கொன்று, மற்றொரு நபரை கடுமையாகக் காயப்படுத்திய குற்றத்தைச் செய்யத் தேவையான துப்பாக்கிகளை கொண்டு சென்றதற்காகவும் இவர் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில், அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், விசாரணையில் ஓகஸ்ட் 19 அன்று வெளிநாட்டுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இந்த சந்தேக நபர் புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். பேலியகொட காவற்துறையினர் ர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More