Home இலங்கைநைஜீரிய இளைஞன் யாழில் கைது!

நைஜீரிய இளைஞன் யாழில் கைது!

by admin
நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சாவகச்சேரி காவற்துறையினரால் இன்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞன் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை சாவகச்சேரி காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , நாவற்குழி பகுதியில் வைத்து குறித்த இளைஞனை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் இளைஞன் இலங்கையில் தங்கி நிற்பதற்கான விசா காலம் நிறைவடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் , இளைஞன் தென்னிலங்கை யுவதி ஒருவரை திருமணம் செய்து தென்னிலங்கையில் வாழ்ந்து வருவதாகவும் , மன்னாருக்கு தனிப்பட்ட தேவைக்காக சென்று , அங்கிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் காவற்துறையினரிடம் இளைஞன் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனை சாவகச்சேரி காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவற்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More