ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவளித்த நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் நன்றி பாராட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அண்மையில் தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நல்லிணக்கம், பொறுப்பு கூறுதல் மற்றும் மனித உரிமை ஆகியனவற்றை மேம்படுத்தல் என்ற தொனிப்பொருளில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அனைத்து நாடுகளும் இலங்கை மீது கொண்டுள்ள புரிந்துணர்வு வரவேற்கப்பட வேண்டியது என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தவும் நாடுகள் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் மனித உரிமைகளை மேம்படுத்தல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டல், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.