Home உலகம்முதியோர்  காப்பகத்தில் தீவிபத்து – 11 போ் பலி

முதியோர்  காப்பகத்தில் தீவிபத்து – 11 போ் பலி

by admin
 

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பொஸ்னியாவின்  ஹெர்சகோவினாவில் உள்ள முதியோர்  காப்பகம் ஒன்றில்  ஏற்பட்ட தீ விபத்தில்  11 பேர்  உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பொஸ்னியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துஸ்லா நகரத்தில் அமைந்துள்ள முதியோர்  காப்பகத்தின் ஏழாவது தளத்தில், நேற்று முன்தினம் இரவு  இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்த  போதும் தீ வேகமாகப் பரவியதால்  11 பேர்   உயிரிழந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. .

மேலும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் உட்பட 30 பேர் படுகாயமடைந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More