Home இலங்கைபோதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட 23 பேர் கைது!

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட 23 பேர் கைது!

by admin

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களுடன் 23 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசேட நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
அதன் போது, 17 வயது சிறுவன் ஒருவன் 09 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அதனை விற்பனை செய்வதற்காகவே உடைமையில் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறுவனை தவிர மேலும் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 550 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் ஐஸ் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர்களின் உடைமையில் இருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்க்கபப்ட்டுள்ளது. அதேநேரம் , நான்கு பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை காவற்துயைினர் மீட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட 23 பேரும் யாழ். புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்களை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More