இந்தக் குற்றம், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி . எம். மிஹால் முன்னிலையில் நேற்று புதன்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் நீண்ட விசாரணைகளின் பின்னர், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டார். எதிரி தரப்பிற்கு சார்பாக சட்டத்தரணி தினேஷன் முன்னிலையாகியிருந்தாா். வழக்குத்தொடருநர் தரப்பிற்காக, அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் முன்னிலையாகி வழக்கினை நெறிப்படுத்தினார்.
தண்டனை குறித்த தனது சமர் பணத்தில், அரச சட்டவாதி . தனுஷன் குற்றத்தின் பாரதூரமான தன்மையையும், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கடுமையாக வலியுறுத்தினார்.
அரச சட்டவாதி அவர்களின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி , குற்றவாளிக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக 200,000/- ரூபாய் (இரண்டு லட்சம் ரூபா) தண்டப்பணம் செலுத்துமாறும் குற்றவாளிக்கு கட்டளையிட்டு நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார்.

