சிரியாவில் சிறைச்சாலை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என சிரிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. சிரியாவின் வடக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள இட்லிப் பகுதியில் உள்ள இந்த விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவாகள் அனைவரும் சிறைக்காவலர்களும் கைதிகளுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த விமானத்தாக்குதல் யாரால் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த தகவல்களை வெளியாகவில்லை.
சிரிய தலைநகர் டமாஸ்கஸ், இட்லிப் போன்ற பகுதிகளில் அரச மற்றும் கிளர்ச்சிப் படைகளுக்கிடையில் கடந்த 10 நாட்களாக கடும் யுத்தம் இடம்பெற்று வருகின்ற நிலையில் சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் விமானத்தாக்குல்களை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதனைத் தொடர்ந்து பெருமளவிலாள பொதுமக்கள் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியயை நோக்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.