Home இந்தியாஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வடகாட்டில் இடம்பெற்ற போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வடகாட்டில் இடம்பெற்ற போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

by admin

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வடகாட்டில் கடந்த 21 நாட்களாக இடம்பெற்ற போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகாடு போராட்டக்குழுவினருடன் இன்று கலெக்டர் கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தியதனைத் தொடர்ந்து உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 21 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து நெடுவாசலில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அப்போராட்டம் வாபஸ் பெறப்பட்ட போதும்  வடகாட்டிலும், நல்லாண்டார் கொல்லையிலும் போராட்டம் தொடர்ந்து நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More