கிறிஸ்துக்கு பின் 6ம் நூற்றாண்டின் முன்னர் மொழி ரீதியாக சிங்களவர்கள் என அழைக்கப்படும் மக்கள் கூட்டம் இந்த நாட்டில் வாழ வில்லை. என வடமாகாண முதலாமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தொடர் ஞாயிறுக்கிழமை காலை யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்தொடரின் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
சிங்கள மொழி உருவானது கிட்டத்தட்ட கி.பி. 6ம் நூற்றாண்டில் தான். அதற்கு முன்னர் மொழி ரீதியாக சிங்களவர்கள் என அழைக்கப்படும் மக்கள் கூட்டம் இந்த நாட்டில் வாழ வில்லை.
பௌத்த மதமானது கி.பி.2ம் , 3ம் நூற்றாண்டாம் கால பகுதியில் தமிழ் மக்கள் பௌத்தர்களாக மாறி இருந்தார்கள் என்பது தான் உண்மை.அக்காலத்தில் சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கு இடமே இல்லை.
சில வருடங்களுக்கு முன்னர் இதனை எடுத்துக் காட்டி பேராசிரியர் சுனில் ஆரியரட்ன ” தெமிழ பௌத்தேயே ” எனும் சிங்கள நூலை வெளியிட்டார்.
எனவே வடமாகணத்தில் இருக்கும் பௌத்த எச்சங்கள் தமிழர்கள் பௌத்தர்களாக வாழ்ந்த காலத்திற்குரியவையே,இங்கு எவ்வித பாரம்பரிய சிங்கள குடியேற்றங்களும் இருந்திருக்கவில்லை என தெரிவித்தார்.