Home இலங்கைவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்  முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்  முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

by admin

 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்  முன்னாள் தலைவர் ஏ.எம்.எம். ஹில்மியை டிசம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று செவ்வாய்க்கிழமை (25)  உத்தரவிட்டுள்ளாா்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கு வெளிப்புற அடிப்படையிலான பயிற்சித் திட்டத்தை வழங்குவதற்காக ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக 2024 ஜனவரி இல் நடத்தப்பட்ட கொள்முதல் செயல்பாட்டில் முறைகேடு நடந்ததாக  அவா்  மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

அவர் சட்டவிரோதமாக விலைமனு கோரலை  JSF  ஹோல்டிங்கிற்கு வழங்கியதாகவும்  இதனால் அந்த நிறுவனம் ரூ. 5.3 மில்லியன் அரச நிதியைப் பெற்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. . மேலும், இந்த தொகையில் ரூ. 4.3 மில்லியனை வழக்கின் முதல் சந்தேக நபரான ஜி.எச்.டி. ஷான் யஹத்பத் சட்டவிரோதமாகப் பெற ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இரண்டு சந்தேக நபர்களும் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கு  உதவி  செய்தமைக்காக  பொது சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டத்தின் கீழ் சதி செய்தல் மற்றும் குற்றத்திற்கு உதவி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ளனா் என்பதுகுறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More