421
திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தில் கடந்த 15 ஆம் திகதி புதிதாக கட்டுமானம் ஒன்றை அமைத்த பெளத்த பிக்கு மற்றும் அவருடன் உடன் இருந்தவர்களை எதிர்வரும் ஜனவரி 14 ந் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி எம்.என்.எம்.சம்சுடீன் இன்று புதன்கிழமை(26) அழைப்பாணை விடுத்துள்ளார்.
கடந்த நவம்பர் 15-ஆம் திகதி, ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாராதிபதி கல்யாணவன்ஸ திஸ்ஸ தேரர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மீது இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களமும், திருகோணமலை துறைமுக காவல்துறையினரும் இந்த வழக்கை முன்வைத்துள்ளனர்.
இந்த வழக்கில் விரிவான அறிக்கையை அடுத்த தவணையில் சமர்ப்பிக்குமாறு காவல்துறையின ருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய தினம் மனுதாரர்கள் தரப்பில் அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்த போதும் எதிராளிகள் தரப்பில் யாரும் முன்னிலையாகவில்லை.
Spread the love

