Home இலங்கை புலம்பெயர் உறவுகள் தாயகத்தில் பணியாற்ற முன் வரவேண்டும் – வட மாகாண முதலமைச்சர்

புலம்பெயர் உறவுகள் தாயகத்தில் பணியாற்ற முன் வரவேண்டும் – வட மாகாண முதலமைச்சர்

by admin

புலம்பெயர் உறவுகள் பணியாற்ற முன் வரவேண்டும் என வட மாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.   யாழ்ப்பாணத்தில் உலக வங்கியின் நிதியில் முன்னெடுக்கப்பட இருக்கும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களிற்கு பொறியியலாளர்கள் பற்றாக் குறையாகவுள்ளதனால், புலம்பெயர் உறவுகள் பணியாற்ற முன் வரவேண்டும் என  அவர்  பொறியியலாளர்களிடம்  கோரிக்கை விடுத்துள்ளார்.

உலக வங்கியின் நிதி திட்டம் தொடர்பில், உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் வட மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே  அவர் இந்த வேண்டுகோளினை  விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் மேற்கொள்ளப்படவுள்ள பல திட்டங்களுக்கான பொறியியலாளர்கள் பற்றாக்குறையாக உள்ளமை காரணமாகவே  அத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தடையாக  உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More