Home இலங்கையாழில். பாதிக்கப்பட்டோர் தொகை 26ஆயிரத்தை அண்மித்தது – 03 வீடுகள் முற்றாக சேதம்

யாழில். பாதிக்கப்பட்டோர் தொகை 26ஆயிரத்தை அண்மித்தது – 03 வீடுகள் முற்றாக சேதம்

by admin

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 07 மணி வரையில் 8ஆயிரத்து 129 குடும்பங்களைச் சேர்ந்த 25ஆயிரத்து 935 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர், நல்லூர், கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை, மருதங்கேணி, ஊர்காவற்றுறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 966 குடும்பங்களைச் சேர்ந்த 3052 அங்கத்தவர்கள் 36 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றது.

4904 குடும்பங்களை சேர்ந்த 15ஆயிரத்து 872 அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை  3 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 163 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More