அனுராதபுர சிறைச்சாலையினுள் இரசிய நிலக்கீழ் சிறைகள் உண்டு எனவும் , அங்கு தமிழ் இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததை தான் கண்டதாக தாயொருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்ப்பணத்தில் வைத்து கடந்த 1996ம் ஆண்டு எமது மகனை இராணுவத்தினர் கடத்தி சென்று இருந்தனர். பின்னர் அனுராதபுர சிறைச்சாலையில் பிள்ளை தடுத்து வைக்கபட்டு உள்ளதாக ஒருவர் எனக்கு கூறி இருந்தார். அதனை அடுத்து நான் அனுராதபுர சிறைச்சாலைக்கு சென்று இருந்தேன்.
சிறைசாலை பகுதியில் நிலத்திற்கு கீழே கிடங்கு வெட்டி பெருமளவான தமிழ் இளைஞர்கள் அந்த கிடங்கினுள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தை என் கண்களால் கண்டேன்.
அவ்வாறு அடைத்து வைக்கபப்ட்டு உள்ள தமிழ் இளைஞர்கள் மீட்கப்பட வேண்டும். இரகசிய முகாம்கள் பற்றிய தகவல்களும் வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.