Home இலங்கைகடற்பாதை உபகரணங்கள் குறிகட்டுவானை செற்டைந்தது.

கடற்பாதை உபகரணங்கள் குறிகட்டுவானை செற்டைந்தது.

by admin
  யாழ்ப்பாணம் , குறிகாட்டுவான் – நயினாதீவு இடையில் புதிய கடற்பாதைக்கான உபகரணங்கள் குறிகாட்டுவான் பகுதிக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு கட்டட பொருட்கள் , உள்ளிட்ட பொருட்கள் , வாகனங்கள் என்பவற்றை கொண்டு செல்வதற்கு பல இன்னல்கள் காணப்பட்ட நிலையில் , கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கடற்பாதை சேவை இடம்பெற்றது.
குறித்த கடற்பாதை நீரில் மூழ்கியமையால் , மீண்டும் பொருட்களை எடுத்து செல்வதில் நயினாதீவு மக்கள் இன்னல்களை எதிர்கொண்டு , பயணிகள் சேவையில் ஈடுபடும் படகுகளிலும் , படகுகளை வாடகைக்கு அமர்த்தியும் பொருட்களை எடுத்து சென்று வந்தனர்.
இந்நிலையில் மீண்டும் கடற்பாதை சேவையை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கையை முன் வைத்து வந்த நிலையில்  , தற்போது புதிய கடற்பாதைக்காக உபகரணங்கள் குறிகட்டுவான் பகுதிக்கு கனரக வாகனங்கள் மூலம் எடுத்து வரப்பட்டுள்ளன.
குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்து வரப்பட்ட கடற்பாதை உபகரணங்களை இன்றைய தினம் புதன்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் நேரில் சென்று பார்வையிட்டார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More