Home உலகம்நாடுகடத்தப்படும் 60க்கும் மேற்பட்ட சட்டவிரோத பணியாளா்கள்

நாடுகடத்தப்படும் 60க்கும் மேற்பட்ட சட்டவிரோத பணியாளா்கள்

by admin

பிரித்தானியாவில் சட்டவிரோதமாகப் பணிபுரிபவர்களை இலக்கு வைத்து, அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் தீவிரமான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்.

சமீப காலமாக, பிரித்தானிய குடிவரவுத் துறை (UK Home Office) சட்டவிரோத வேலைவாய்ப்புகளை ஒழிக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் பல அதிரடிச் சோதனைகளை நடத்தி வருகிறது.

சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்கவும், வேலைவாய்ப்பு விதிகளை மீறும் முதலாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் இந்தச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சோதனை நடவடிக்கைகளில் சிக்கியவர்களில் இந்தியர்கள், பங்களாதேஷ் மற்றும் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். குறிப்பாக,  உணவு விநியோகிப்பாளர்கள் மற்றும் உணவகங்களில் சட்டவிரோதமாகப் பணிபுரிந்த பலர் கைது செய்யப்பட்டனர்.

 பணிபுரியும் வெளிநாட்டவர்களைக் குறிவைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சட்டவிரோதமாக நாட்டில் வசிப்பவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை அரசு அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களில், பல்லாயிரக்கணக்கானோர் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளனர்.

 “சட்டவிரோதமாக இங்கு பணிபுரிந்தால், நீங்கள் கைது செய்யப்பட்டு அகற்றப்படுவீர்கள் என்ற தெளிவான செய்தி அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது” என பிரித்தானியாவின் எல்லைப் பாதுகாப்புத் துறை அமைச்சர்  திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கைகள், புலம்பெயர்ந்தோர் மத்தியில் ஒரு புதிய விதமான அச்சத்தையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More