இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முடக்கி, அவற்றை அரசுடமையாக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அதிரடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவற்துறை அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் இது தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிட்டார்.
💰 கடந்த மற்றும் நடப்பு ஆண்டுகளில் முடக்கப்பட்ட மொத்த சொத்துக்கள்:
குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களிடமிருந்து இதுவரை பின்வரும் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:
✨ 354 பவுன் தங்கம்
🚗 77 வாகனங்கள்
💵 35 கோடி ரூபாய் பணம்
🏠 ஏனைய சொத்துக்கள்: ஒரு கோடியே நூற்று ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியானவை.
📊 ஆண்டு வாரியான விபரங்கள்:
🗓️ 2024 ஆம் ஆண்டில்:
150 பவுன் தங்கம் மற்றும் 64 வாகனங்கள்.
6 கோடி ரூபாய் பணம் மற்றும் 61 கோடி ரூபாய் பெறுமதியான இதர சொத்துக்கள் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
🗓️ 2025 ஆம் ஆண்டில் (இதுவரை):
204 பவுன் தங்கம் மற்றும் 13 சொகுசு வாகனங்கள்.
67 கோடியே 78 இலட்சம் ரூபாய் பெறுமதியான காணிகள் மற்றும் ஏனைய சொத்துக்கள்.
18 வீடுகள் உள்ளிட்ட பெருமளவிலான சொத்துக்கள் அரசுடமையாக்கப்படவுள்ளன.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் குற்றச் செயல்கள் மூலம் சொத்து சேர்ப்பவர்களுக்கு எதிராக சட்டத்தின் பிடி இறுகுவதை இந்த நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. ⚖️
🚨The Underworld Shaken: ADK + NPP’s Historic Achievement —
🚨 Assets of Criminals Frozen! Multi-million Rupee Properties to Be Taken Over by the State!
#SriLanka #PoliceNews #LegalAction #CrimePrevention #SriLankaPolice #TamilNews #EconomicJustice #AssetSeizure #BreakingNews #lka

