ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினர் தமக்கு ஆதரவளிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புக்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் மாகாண முதலாமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஜனாதிபதி நேற்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி, தமக்கு ஆதரவளிக்காத முதலமைச்சர்கள், அமைச்சர்கள் இருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார். சில மாகாண முதலமைச்சர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் பூரணமாக தமக்கு ஆதரவளித்து வருவதாகவும், சிலர் ஆதரவளி;க்கவில்லை எனவும், மேலும் சிலர் இடைநடுவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.