வடக்கில் மேலும் நான்காயிரம ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். யாழ். மாவட்ட செயகத்தில் நேற்று இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இருபதாயிரம் ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவற்றில் இரண்டாயிரம் ஏக்கர் காணி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மேலும் நான்காயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளர்h.
மேலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் யாழ்.மாவட்டத்தின் காங்கேசன் துறைமுகப் பகுதியின் சில இடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, இராணுவ தலைமைப்பீட உயர் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று செல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
00