Home இலங்கைமுன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு!

by admin
தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை மற்றும் அது பாதாள உலகக் குழுவினரிடம் சிக்கியமை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, 72 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அனுமதி பெற்றுள்ளது.
2001 ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினால் பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு பாதாள உலகக் குழுத் தலைவர்’மாகந்துரே மதூஷிடம்’ நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி வெலிவேரிய பகுதியில் உள்ள பாலத்திற்கு அருகிலுள்ள புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.
இதனை அடுத்து இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி எவ்வாறு பாதாள உலகக் குழுவினரிடம் சென்றது என்பது குறித்த விசாரணைகளுக்காக, அவர் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டார்.
தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More