Home இலங்கை🚨   மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் – பெண் உட்பட நால்வர் கைது:

🚨   மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் – பெண் உட்பட நால்வர் கைது:

by admin

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் நீண்ட காலமாக திட்டமிட்டு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த ஒரு பெண்ணையும், அவருடன் தொடர்புடைய மூவரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் விநியோகித்து வந்துள்ளார்.

இது தொடா்பில் பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவல்களின் அடிப்படையில், காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் குறித்த பெண் ஐஸ் போதைப்பொருளுடன் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து சட்டவிரோத போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் போதை தரக்கூடிய ‘மாவா’ பாக்கு வகைகளுடன் மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் நீண்டகாலமாக இந்த வலையமைப்பை நடத்தி வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு போதைப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது மற்றும் இதன் பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tag Words: #JaffnaNews #DrugBust #IceDrug #PoliceArrest #JaffnaStudents #CrimeAlert #DrugFreeJaffna #TamilNews #SriLankaPolice #CommunitySafety

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More