Home இலங்கைநெடுந்தீவு கடற்பரப்பில்   3 தமிழக மீனவர்கள் கைது!

நெடுந்தீவு கடற்பரப்பில்   3 தமிழக மீனவர்கள் கைது!

by admin
யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அத்துமீறி நுழைந்த தமிழகப் படகு ஒன்றைச் சுற்றி வளைத்ததுடன் அந்தப் படகிலிருந்த 3 தமிழக மீனவர்களை கைது செய்தனா். அவர்களின் படகும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகு மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மீனவர்களை கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More