“குறித்த துப்பாக்கி டக்ளஸ் தேவானந்தாவால் தமக்கு வழங்கப்பட்டதாக, மறைந்த பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘மாகந்துரே மதுஷின்’ நெருங்கிய சகா ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த விசாரணைகள் தீவிரமடைந்தன.”
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது.
தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் காணாமல் போனது மற்றும் அவை பாதாள உலகக் குழுவினருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) அவர் கைது செய்யப்பட்டார்.
2001 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சருக்கு இராணுவத்தினால் 13 T56 ரக துப்பாக்கிகள் மற்றும் 7 கைத்துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 20 துப்பாக்கிகள் வழங்கப்பட்டன.
இவற்றுடன் 1500-க்கும் மேற்பட்ட T56 தோட்டாக்களும், 100-க்கும் மேற்பட்ட 9mm தோட்டாக்களும் வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெலிவேரிய பகுதியில் 2019 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையது என அடையாளம் காணப்பட்டது.
குறித்த துப்பாக்கி டக்ளஸ் தேவானந்தாவால் தமக்கு வழங்கப்பட்டதாக, மறைந்த பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘மாகந்துரே மதுஷின்’ நெருங்கிய சகா ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த விசாரணைகள் தீவிரமடைந்தன.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் 72 மணிநேரத் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர், இன்று கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவரை ஜனவரி 9 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) முன்னெடுத்து வருகின்றனர்.
#DouglasDevananda #SriLankaPolitics #CourtNews #CID #BreakingNews #SriLanka #CrimeInvestigation #TamilNews #EPDP

