‘லோகேஷ் கனகராஜ்’ இயக்கத்தில் உருவான ‘கூலி’ (Coolie) படத்திற்குப் பிறகு, ரஜினி தனது 172-வது படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். இதற்கான கதை கேட்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
‘பார்க்கிங்’ (Parking) படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், ரஜினியைச் சந்தித்து ஒரு கதையைக் கூறியுள்ளார். ஆனால், அந்தக் கதை ரஜினிக்கு முழு திருப்தியை அளிக்கவில்லை என்றும், அதனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடா்ந்து தற்போது ‘ஓ மை கடவுளே’ , ‘டிராகன்’ (Dragon) படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பெயர் பலமாக அடிபடுகிறது. ரஜினிகாந்த் இவரிடம் ஒரு ‘லைன்’ கேட்டிருப்பதாகவும், அது அவருக்குப் பிடித்துப் போயுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இயக்குநர் மாரி செல்வராஜும் ரஜினிக்காக ஒரு கதையைத் தயார் செய்து வருவதாகச் செய்திகள் வந்தன. எனினும், தற்போதைய நிலவரப்படி அஸ்வத் மாரிமுத்துவுக்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.
வழக்கமான ஆக்ஷன் பாணியில் இல்லாமல், அஸ்வத் மாரிமுத்துவின் பாணியில் ஒரு ‘யூத்ஃபுல்’ மற்றும் எனர்ஜி நிறைந்த கதையில் ரஜினியைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரக்கூடும்.
Tag Words: #Thalaivar172 #Rajinikanth #AshwathMarimuthu #DragonMovie #ParkingDirector #KollywoodNews #Coolie #SuperstarRajinikanth #CinemaUpdate #TamilNews

