Home உலகம்🚨 வடக்கு கரோலினாவில் ISIS இன் புத்தாண்டு பயங்கரவாத சதி முறியடிப்பு!

🚨 வடக்கு கரோலினாவில் ISIS இன் புத்தாண்டு பயங்கரவாத சதி முறியடிப்பு!

by admin

அமெரிக்காவின் வடக்கு கரோலினா (North Carolina) மாநிலத்தில் புத்தாண்டு தினத்தன்று (2026) ஒரு பல்பொருள் அங்காடிக் கடை (Grocery Store) மற்றும் துரித உணவகம் ஆகியவற்றைக் குறிவைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த கிறிஸ்டியன் ஸ்டர்டிவண்ட் (Christian Sturdivant) என்ற 18 வயது இளைஞனை FBI அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மத்திய புலனாய்வுத் துறையினர் (FBI) மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையின் மூலம், பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தவிருந்த இந்தச் சதித் திட்டம் சரியான நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்: கிறிஸ்டியன் ஸ்டர்டிவண்ட், மிண்ட் ஹில் (Mint Hill) பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஒரு அமெரிக்கப் பிரஜை ஆவார்.

இவர் குறிப்பிட்ட பல்பொருள் அங்காடி மற்றும் ஒரு துரித உணவகம் ஆகியவற்றில் துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் சுத்தியல்களை (Hammers) பயன்படுத்தி 20-க்கும் மேற்பட்ட மக்களைக் கொல்லத் திட்டமிட்டிருந்தார்.

இவர் ஐசிஸ் (ISIS) பயங்கரவாத அமைப்புக்கு விசுவாசப் பிரமாணம் (Bayat) எடுத்திருந்ததோடு, தன்னை அந்த அமைப்பின் ஒரு போராளியாகக் கருதி ‘ஜிகாத்’ செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இவர் சமூக வலைதளங்களில் போலி ISIS ஆதரவாளர்களுடன் (உண்மையில் அவர்கள் FBI மாறுவேட அதிகாரிகள்) தொடர்பில் இருந்துள்ளார். அவர்களிடம் தனது தாக்குதல் திட்டங்களை விவரித்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த டிசம்பர் 29 அன்று இவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், “New Years Attack 2026” என்ற தலைப்பிலான கையெழுத்துப் பிரதி கண்டெடுக்கப்பட்டது.

இவரது மெத்தையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பெரிய கத்திகள் மற்றும் சுத்தியல்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஸ்டர்டிவண்ட் மீது “வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவு வழங்க முயன்றமை” உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

Tag Words: #FBIFoilsAttack #ISISInspired #NewYearsEve2026 #ChristianSturdivant #NorthCarolinaNews #TerrorPlotThwarted #KashPatel #USNews #TamilNews

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More