by admin
கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தென்கொரியாவின் வான்வெளி அத்துமீறல்கள் தொடர்ந்தால், அந்நாட்டின் அதிநவீன போர் விமானங்களை ஏவுகணைகள் மூலம் தரைமட்டமாக்கப் போவதாக வடகொரியா பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
இதன் அடிப்படையில் தென்கொரியாவிடம் உள்ள அமெரிக்க தயாரிப்பான 40 F-35 ஸ்டீல்த் (Stealth) விமானங்கள் மற்றும் F-15K ரக போர் விமானங்களை வடகொரியா தனது இலக்காக அறிவித்துள்ளது.
தென்கொரியா தொடர்ந்து ட்ரோன்கள் (Drones) மற்றும் உளவு மென்பொருட்கள் (Spywares) மூலம் பியாங்யாங்கின் வான்வெளியை மீறுவதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த அத்துமீறல்கள் நிறுத்தப்படாவிட்டால், நூற்றுக்கணக்கான பால்ஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தென்கொரியாவின் விமானப் படைகளை முற்றிலுமாக அழிக்கப் போவதாக கிம் ஜாங் உன் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக இரு நாடுகளுக்கும் இடையே டிரோன் ஊடுருவல் தொடர்பான மோதல் அதிகரித்து வரும் நிலையில், இந்த மிரட்டல் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் இந்த நகர்வை கொரியப் பிராந்தியத்தில் ஒரு பெரிய போருக்கான அறிகுறியாகப் பார்க்கின்றனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More