ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்காக சட்ட நடவடிக்கைகளைத் ஆரம்பிப்பது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கையெழுத்திட்ட 6 பக்க கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்டு டஸ்க்கிடம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரித்தானியத் தூதர் சர் டிம் பாரோ இன்று பிற்பகலில் கையளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை இரு வருடங்களில் முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான கடிதத்தில், பிரித்தானிய பிரதமர் தெரீசா மே இன்று காலை கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.