யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, கால எல்லைக்குள் பயன்படுத்தப்படாததால் மீண்டும் அரசாங்கத் திறைசேரிக்கு (Treasury) திரும்பியுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நீதி அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டது. இருப்பினும், யாழ்ப்பாணத்தில் நிலவிய கடும் மழை மற்றும் புதைகுழிக்குள் தேங்கிய வெள்ள நீர் காரணமாக அகழ்வுப் பணிகளைத் தொடங்க முடியாமல் போனது. நிதி ஆண்டின் இறுதியில் செலவு செய்யப்படாத தொகை வழக்கப்படி மீண்டும் திறைசேரிக்குச் சென்றுள்ளது.
இந்தநிலையில் இவ்வாண்டு அகழ்வுப் பணிகளைத் தொடர, சட்ட வைத்திய அதிகாரியால் புதிய செலவீன அறிக்கை தயாரிக்கப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் நீதி அமைச்சுக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதுவரை 240 என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னும் பல எச்சங்கள் அப்பகுதியில் இருக்கலாம் என நம்பப்படுவதால், 08 வார கால தொடர் அகழ்வுப் பணிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 09 ஆம் திகதி நல்லூர் பிரதேச சபையின் உதவியுடன் புதைகுழிக்குள் தேங்கியுள்ள நீர் வெளியேற்றப்படும். அதன் பின்னரே அகழ்வுப் பணிகளின் ஆரம்பத் திகதி தீர்மானிக்கப்படும்.
Tag Words: #ChemmaniMassGrave #JaffnaNews #JusticeDelayed #MassGraveExcavation #SriLankaTreasury #LegalNews #NallurPS #ForensicInvestigation

