166
இரண்டு கிலோ கிராம் எடையுடைய தங்கம் கடத்திய ஏழு இலங்கைப் பெண்கள் இந்தியாவில் கைது செய்பய்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பங்களுருவின் கெம்பிகௌடா சர்வதேச விமான நிலையத்தில் குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வயிற்றிலும் தலை முடியிலும் மிகவும் நுட்பமான முறையில் தங்கத்தை மறைத்து வைத்து இவர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
சர்வதேச தங்கக் கடத்தல் கும்பலுடன் இந்த கைதானவர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
தங்கம் கடத்துவதற்காக 20000 ரூபா பணமும், விமான டிக்கட் மற்றும் தங்குமிட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love