ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தென்கொரியா ஜனாதிபதி பார்க் குவென் ஹைக் கைது செய்யப்பட்டுள்ளார். பார்க் உடனடியாக பதவி விலக வேண்டும் என பேரணியும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்ற நிலையில் எதிரான குற்ற விசாரணை தீர்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு அவர் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
மேலும் அவர் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டுமென அந்நாட்டு லஞ்ச ஊழல் தடுப்பு கண்காணிப்பகம் அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில் அவர் அங்கு சமூகமளித்து விளக்கமளித்தார்
அவர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்து ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.