354
சீனாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தித் திறன், அமெரிக்காவை விட 3 மடங்கு (3x) வேகமாக வளரும் என கணிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது ஆண்டுக்கு சுமார் 1,000 GW சூரிய மின்சக்தி கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இது உலகிலேயே மிகப்பெரிய அளவாகும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் துறையின் அசுர வளர்ச்சிக்கு அதிகப்படியான மின்சாரம் தேவைப்படும். அந்தத் தேவையை சீனா மிகச்சரியாகப் பூர்த்தி செய்து வருவதாக மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் மின் உற்பத்தி திறன் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாகவும், குறிப்பாக சூரிய சக்தி (Solar Energy) உற்பத்தியில் சீனா உலக நாடுகளுக்கே சவாலாக விளங்குவதாகவும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் அதிபர் எலோன் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சூரிய சக்தி பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள அதிகப்படியான வரிகள் (Tariffs), அதன் வளர்ச்சியைப் பாதிப்பதாக மஸ்க் கவலை தெரிவித்துள்ளார்.
“சூரிய மின்சக்தி உற்பத்தியில் சீனாவின் முன்னேற்றம் நம்பமுடியாதது. அமெரிக்காவும் இதே வேகத்தில் செயல்பட வேண்டியது அவசியம்.” என எலோன் மஸ்க் வலியுறுத்தி உள்ளார்.
எதிர்கால ஆற்றல் தேவைகளை (Energy Needs) பூர்த்தி செய்வதில் சீனா இப்போது உலகின் “பவர் ஹவுஸாக” மாறி வருகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
________________________________________
Spread the love

