Home உலகம்பிரித்தானிய  வரி உயர்வு – 59 வாகனங்களுக்கு £5,690 வரி!

பிரித்தானிய  வரி உயர்வு – 59 வாகனங்களுக்கு £5,690 வரி!

by admin

பிரித்தானியா , வரி உயர்வு, Road Tax ,

பிரித்தானியாவில் 2026 ஏப்ரல் முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய வீதி வரி (Road Tax) உயர்வு, குறிப்பாக அதிக புகை வெளியேற்றும் சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக வாகன உரிமையாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2025-ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட வரி உயர்வைத் தொடர்ந்து, 2026 ஏப்ரல் 1 முதல் முதலாம் ஆண்டுக்கான வாகன வரி (First-year VED) மேலும் £200 அதிகரிக்கப்பட்டு £5,690 ஆக உயர்த்தப்படவுள்ளது. ஒரு கிலோமீட்டருக்கு 255 கிராமுக்கு (255g/km) அதிகமான கார்பன்-டை-ஒக்சைடை வெளியேற்றும் 24 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 59 வகையான கார்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

2025 ஏப்ரலில் இந்த வரி £2,745 லிருந்து £5,490 ஆக இரட்டிப்பாக்கப்பட்டது. இப்போது அது £5,690 ஆக உயர்கிறது.£40,000 க்கும் அதிக மதிப்புள்ள கார்களுக்கு மேலதிகமாக £425 வருடாந்த வரி (இரண்டாம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு) விதிக்கப்படும். (மின்சார வாகனங்களுக்கு இந்த வரம்பு £50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது)

🏎️ பாதிக்கப்பட்ட சில முக்கிய கார் மாடல்கள்:

தயாரிப்பு நிறுவனம் பாதிக்கப்பட்ட மாடல்கள் (உதாரணங்கள்)
Audi RS6, RS7, RSQ8, S8, R8
BMW M8, X5 M, X6 M, X7 M
Ford Mustang 5.0 V8, Ranger 3.0 V6
Porsche 911 Turbo, Cayenne 4.0T, Macan 2.9T
Range Rover 4.4 P530 V8, Sport 4.4P
Toyota Hilux 2.8D, Land Cruiser 2.8D
Lamborghini Huracan, Urus, Revuelto

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கான வரியை அதிகரிப்பதன் மூலம், மக்களைச் சுற்றாடலுக்குப் பாதிப்பில்லாத மின்சார வாகனங்களுக்கு (EV) மாறத் தூண்டுவதே பிரித்தானிய அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். மின்சார வாகனங்களுக்கான முதலாம் ஆண்டு வரி வெறும் £10 ஆக மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது

Tag Words:#UKRoadTax #VED2026 #CarTaxIncrease #Audi #BMW #Ford #ElectricVehicles #UKMotoring #BreakingNews2026 #LKA

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More