nurse லூசி லெட்பி (Lucy Letby) தொடர்பான இந்த அதிர்ச்சியூட்டும் வழக்கு, மருத்துவ வரலாற்றில் மிகவும் கறுப்புப் பக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிரித்தானியாவின் Countess of Chester மருத்துவமனையில் பணிபுரிந்த லூசி லெட்பி என்ற செவிலியர், பச்சிளம் குழந்தைகளைக் கொன்ற குற்றத்திற்காக உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
லூசி லெட்பி, ஏழு பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்ததாகவும், மேலும் ஆறு குழந்தைகளைக் கொலை செய்ய முயன்றதாகவும் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. இதில் 5 குழந்தைகள் ஆரம்பகட்ட விசாரணைகளில் முக்கியமாகப் பேசப்பட்டவர்கள். குழந்தைகளுக்கு ஊசி மூலம் காற்றைச் செலுத்தியும் (Air embolism), அதிகப்படியான பாலை வலுக்கட்டாயமாக ஊட்டியும், இன்சுலின் நஞ்சைச் செலுத்தியும் அவர் இந்தக் கொலைகளைச் செய்துள்ளார்.
ஜூன் 2015 முதல் ஜூன் 2016 வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் இந்தப் படுகொலைகள் அரங்கேறியுள்ளன.
இந்த வழக்கை “பிரித்தானிய வரலாற்றிலேயே மிக நீண்ட கொலை வழக்கு” என்று அழைக்கின்றனர்.
லூசி லெட்பிக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை (Whole-life order) விதிக்கப்பட்டது. அவர் மீண்டும் ஒருபோதும் விடுதலையாக முடியாது.
அவர் ஏன் இதைக் செய்தார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. எனினும், அவரது வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குறிப்பில் “நான் தீயவள், இதை நானே செய்தேன்” என்று அவர் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tag Words: #LucyLetby #HospitalMurder #UKCrime #MedicalEthics #InfantSafety #Justice #BreakingNews #LKA #CrimeHistory

