Home இலங்கை⚡  கலகாவில்  மின்சாரம் தாக்கி  தாயும் மகளும்  பலி!

⚡  கலகாவில்  மின்சாரம் தாக்கி  தாயும் மகளும்  பலி!

by admin

கண்டி, கலகா (Galaha) காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட நவனெலிய, கிரிபோகஹின்ன பகுதியில்
இன்று (07-02-2026) முற்பகல் 10:00 மணியளவில், வீட்டுத் தோட்டத்தில் கருவேப்பிலை பறித்துக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிாிழந்துள்ளனா். 46 வயதுடைய தாயும், அவரது 13 வயதுடைய மகளுமே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கருவேப்பிலை மரத்தில் இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தபோது, மரத்திற்கு அருகாமையில் அறுந்து தரையில் விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை அவர்கள் கவனிக்கவில்லை எனத் தெரிகிறது. எதிர்பாராத விதமாக அந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சீரற்ற வானிலை அல்லது காற்றினால் மின்கம்பி அறுந்து விழுந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கலகா காவல்துறையினா் இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சடலங்கள் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபை (CEB) அதிகாரிகள் இது குறித்து முறையான அறிவித்தலை வழங்கத் தவறியுள்ளனரா அல்லது இது ஒரு தற்செயலான விபத்தா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tag Words: #GalahaTragedy #Electrocution #SafetyFirst #SriLankaNews #BreakingNews2026 #LKA #CEBSafety #PublicAlert

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More